• Dec 09 2022

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...அடுத்து நடக்கப்போவது என்ன..?

Listen News!
Aishu / 2 months ago
image
Listen News!

குழந்தை வளரட்டும் இதை வைத்து நான் பாரதியை திருமணம் செய்வேன் என புதிய திட்டம் ஒன்றை திட்டுகிறார் வெண்பா.

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா .இத் தொடரில் சமீபத்தில் தான் தீவிரவாதி சீக்வன்ஸ் முடிவுற்றது.அத்தோடு பாரதி மற்றும் கண்ணம்மா வேலை பார்க்கும் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜெக் செய்திருந்தனர்.இதன் பின்னர் தீவிரவாதிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற துவங்கியதால் பிணைக்கைதிகளை அடுத்தடுத்து வெளியில் அனுப்பிய தீவிரவாதிகள், பாரதியை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு அவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டி மிரட்டி வந்தனர்.

மேலும் அந்த நேரத்தில் கண்ணம்மா தனது உயிரையும்  துச்சமென எண்ணிக் பாரதியை விட்டு நீங்காது அவரை கட்டிக்கணித்தபடி போராடி தீவிரவாதிகள் இடம் இருந்து கணவனை மீட்டு எடுத்தார்.எனினும் தற்போது இருவரும் பாரதியின் வீட்டில் தான் உள்ளார். இதன் காரணமாக கண்ணம்மா குறித்த எண்ணங்கள் பாரதி மனதில் மலரத் ஆரம்பமாகி உள்ளது. இது சௌந்தர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்து வரும் நிலையில்  இன்னொரு பக்கம் புது பூகம்பம் ரெடியாகிவிட்டது.

கனவில் கண்டபடியே உண்மையாக கர்ப்பமாக இருப்பதை அறிகிறார் வெண்பா. இதனால் ஷாக்காகும் வெண்பா இந்த குழந்தையை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வரும் சாந்தி ஏதாவது மாத்திரை வாங்கி கொடுக்கட்டுமா குழந்தையை களைத்து விடலாம் எனக்கு சொல்கிறார். இல்லை இல்லை வேண்டாம் நான் கலைக்க மாட்டேன் என்கிறார் வெண்பா. நீங்கள் இந்த குழந்தையை வளர விட்டால் ரோஹித் இதை காரணம் காட்டி உங்களை திருமணம் செய்து கொள்வான். உங்கள் அம்மாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான் என கூறுகிறார் சாந்தி. 

அதற்கு வெண்பா  இந்த குழந்தையை வைத்து புது ஐடியா வைத்துள்ளேன். பாரதியின் குழந்தையை அவன் குழந்தை இல்லை என்று நம்ப வைத்த என்னால் என் வயிற்றில் வளரும் குழந்தையை பாரதியின் குழந்தை தான் என நம்ப வைக்க முடியாதா? இந்த குழந்தை வளரட்டும் இதை வைத்து நான் பாரதியை திருமணம் செய்வேன் என புதிய திட்டம் ஒன்றை திட்டுகிறார். மேலும் அதை தொடர்ந்து பாரதிக்கு வாழ்த்து கூறி  மெசேஜ் பண்ணுகிறார். 

இதனைத் தொடர்ந்து பாரதி வெண்பாவிற்கு ஃபோன் செய்து நான் செத்துப் பிழைத்து வந்திருக்கேன். என்னை பார்க்க நீ வந்தியா ஒரு போன் கூட இல்லை இப்போ வாழ்த்து சொல்லி மெசேஜ் பண்ணி இருக்க எனக்கு கோபப்படுகிறார்.  உன்னை மாதிரி தான் நானும் மரணம் வரை சென்று திரும்பி வந்திருக்கிறேன். 

நான் உன்கிட்ட நேர்ல இதைப் பற்றி பேசுகிறேன் என்கிறார். அதன் பின்னர் அந்த கண்ணம்மா உன்னோட உயிரை காப்பாத்திட்டா நியூஸ் பார்த்தேன். மேலும் இத வச்சு உன் வீட்டில் இருப்பவர்கள் உன்கூட அவளை சேர்த்து வைக்க பார்க்கிறார்கள். ஆனால் ஒரு பொண்ணு தன்னுடைய கணவனுக்கு பண்ணக்கூடாது துரோகத்தை கண்ணம்மா உனக்கு பண்ணிருக்காள் என கூறி போனை வைக்கிறார்.  அதன் பின்னர் ஏற்கனவே அறிவித்தபடி குடும்பத்துடன் ன் பாரதி கண்ணம்மா சென்று விருது வாங்குகின்றனர் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.