• Apr 20 2024

உயிர்த்தோழனே வாழ்க என்றும் வளமுடன்-இளையராஜாவைப் பாராட்டிய பாரதிராஜா

stella / 1 year ago

Advertisement

Listen News!

மூத்த இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இதுவரைக்கும் 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.

அத்தோடு இவர் தனது நீண்ட ஆயுளை அதிகரிக்க நேற்றைய தினம் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோயிலில் அவரது குடும்பத்தினர் சதாபிஷேக பூஜை செய்தனர்.

இந்த பூஜையில் இளையராஜாவின் நெருங்கிய நண்பரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் கலந்துகொண்டார். இது குறித்த புகைப்படங்களும் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்போது இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் “வாழ்க.. என்றும் வளமுடன்.. என்றும் வாழ்கவே.. உயிர் தோழனே…” என்று வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement