• Apr 19 2024

ஸ்டார்ட்ல விஜய்க்கு பாரதிராஜா, கௌதம் மேனன் வாய்ப்பு தரவில்லை.. எஸ்.ஏ. சந்திரசேகர் பரபரப்பு பேச்சு!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் கருமேகங்கள் கலைகின்றன.

இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு தொடங்கிய தற்போது முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில், இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார்.

பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு பாசத்திற்குரிய அப்பாக நடித்துள்ளார். அப்பா மகளின் பாசத்தை பேசும் திரைப்படமா இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாரதி ராஜா நேர்மை தவறாத நீதிபதியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசி எஸ்.ஏ.சந்திரசேகர், யார் மீதாவது நாம் அன்புவைத்தால் அது மனதைவிட்டு என்றுமே மறையாது,அது போல சினிமாவை நாம் நேசிப்பதால், அது ஏதோ ஒருவகையில் நம்மை பிடித்துவைத்துக் கொண்டே இருக்கும் அதற்கு சினிமாவிற்கு முதல் நன்றி.நல்ல பெயர் சம்பாதிக்கவில்லை : நான் நிறைய படங்களை இயக்கி பணம் சம்பாதித்து இருக்கிறேன். ஆனால் தங்கர்பச்சன் மாதிரி நான் பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் போல இயக்குநராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் என்னால் அப்படி ஒரு இயக்குநராக ஆக முடியவில்லை. அவர் நிறைய சறுக்களை சந்தித்தாலும் மீண்டும் வந்து நிற்கிறார்.

என் மகன் விஜய் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட போது, என் மகனின் ஆல்பத்தை எடுத்துக்கொண்டு பாரதிராஜாவிடம் தான் சென்றேன். ஆனால், அவர் என்னிடம் ஏன் கொண்டு வந்தே என்று கேட்டு சொல்லாமல் மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் விஜயை வைத்து படம் எடுக்க பாரதிராஜா, கௌதம் மேனன் போன்ற பல நல்ல இயக்குநர்கள் முன்வரவில்லை அதுவும் ஒருவகையில் நல்லதுதான் ,அவர் என் கையில் வந்த தால் தான் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாறினார். அதற்கு நான் கடவுளுங்கு நன்றி கூறி கொள்கிறேன் என்றார்


Advertisement

Advertisement

Advertisement