பாரதி கண்ணம்மாவில் புதிதாக நடிக்க வந்த பாரதி மாமா இவர் தானாம்.

18037

தமிழ் சின்னத்திரையில் தற்பொழுது மக்கள் அதிகம் விரும்பிப்பார்க்கப்படும் தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சியுள்ளது. மேலும் விஜய்டிவியில் ஓடம் சீரியல்களையே மக்கள் அதிகம் விரும்பிப்பார்ப்பதுடன் trpயிலும் முன்னணியில் இருப்பதைக் காணலாம்.

இவ்வாறு விஜய் தொலைக்காட்சி TRP உச்சத்தில் செல்ல முக்கிய சீரியல் பாரதி கண்ணம்மா.இதில் கதாநாயகியாக, கண்ணம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி, தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

அத்தோடு இந்த சீரியல் ஏனைய நட்சத்திரங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் ”பாரதி கண்ணம்மா மற்றும் ஈரமான ரோஜாவே” உள்ளிட்ட சீரியல்களில் நடிகர், நடிகைகளுக்கு அப்பாவாக நடித்து வந்தவர் நடிகர் வெங்கடேஷ்.

இவர் சில வாரங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது இழப்பு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலில் வெங்கடேஷ் நடித்து வந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் நடிக்க வந்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.