• Apr 20 2024

1000 ஆவது எபிசோட்டைத் தொட்ட 'பாரதி கண்ணம்மா' ... ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக சீரியல்களை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்த சீரியல்கள் மட்டுமன்றி, சீரியல்களில் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் எளிதில் பிரபல்யமடைந்து விடுவார்கள். 


அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா'. ஆரம்பத்தில் இந்த சீரியல் சற்று பரபரப்பாக செல்லவில்லையென்றாலும் பாரதி மற்றும் கண்ணம்மா விவாகரத்து தொடர்பில் தகவல் வெளியானதிலிருந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஓடிக் கொண்டிருகிறது.


இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் எபிசோட்டுகள் யாவுமே மக்களின் கண்ணுக்கு விருந்து அளிக்கும் வகையிலேயே இடம்பெறுகின்றன. அந்தளவிற்கு விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் இந்த சீரியல் ஆனது சுவாரஷ்யமான கதையம்சத்துடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இந்த சீரியலானது இன்றைய தினம் 1000 ஆவது எபிசோட்டை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இந்த சீரியலின் முக்கிய பிரபலங்கள் யாவரும் ஒன்றாக இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடுகின்றனர். இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement