திடீர் திருப்பங்களைக் கொண்டு ஒளிபரப்பப்படவுள்ள பாரதி கண்ணம்மா சீரியல்- மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

6716

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாரதி கணணம்மா சீரியல்.இச்சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே. அத்தோடு trpயிலும் இச் சீரியலே முன்னணியில் காணப்படுகின்றது.

பாரதி கண்ணம்மாவில் நாயகன்-நாயகி எப்போது இணைவார்கள் என்கிற கவலை தான் மக்களிடம் உள்ளது.ஆனால் அவர்கள் இருவரும் இணைந்தால் கதையே முடிந்துவிடும் என்பதால் இயக்குனர் கதையை இழுத்துக் கொண்டே வருகிறார் என்பதும் தெரிந்ததே.

மேலும் அடுத்து என்ன ஆகும் என்று மக்கள் யோசிக்கிறார்கள் .இந்த நிலையில் தான் ஒரு தகவல் வந்துள்ளது, பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகன்-நாயகி இடையே ஒரு பரபரப்பான வாக்குவாதம் செய்யும் காட்சி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த காட்சி இந்த வாரத்தில் ஏன் இன்று கூட ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: