• Apr 24 2024

வந்தது பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ்- வைரலாகும் படப்பிடிப்பு தள வீடியோ

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பாரதி கண்ணம்மா என்பது விஜய் தொலைக்காட்சியில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.


மேலும் இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். 


மேலும் கண்ணம்மாவும் அஞ்சலியும் இருவரும் மாற்றாந்தாய் சகோதரிகள். கண்ணம்மா கருத்த நிறம் கொண்டவள். அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவள்.


கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற கணவன் அமைகிறான். அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது இவர்களின் வாழ்வில் அஞ்சலி, வெண்பா ஆகியோரால் வரவிருக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து, இந்த கதை நகர்கின்றது.


இந்த நிலையில் பாரதிக்கு உண்மைகள் அனைத்து தெரிய வர இறுதி கட்டம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது அண்மையில் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இதோ பாருங்கள்..


Advertisement

Advertisement

Advertisement