நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதி கண்ணம்மா சீரியலோடு இணைந்த பிரபல நடிகர்

1561

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். மேலும் இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்கள் என்பன செம ஹிட்டானவை என்பது தெரிந்ததே. அந்த வகையில் விஜய்டிவியில் செம சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

கணவனைப்பிரிந்து வாழும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்துக்காட்டுவதால் இச் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் முக்கியமாகும். அத்தோடு இச் சீரியல் ரி ஆர் பி யிலும் முன்னணியில் நிற்பதும் தெரிந்ததே.அத்தோடு பாரதி எப்போது கண்ணம்மாவுடன் இணைவார் இதுவே சீரியலுக்கான கதையை நீட்டிக்க ஒரு கருவாக உள்ளது.

மேலும் இப்போது தான் பாரதி கொஞ்சம் கொஞ்சமாக கண்ணம்மாவை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார். அத்தோடு சீரியலில் ஒவ்வொரு நாளும் சில சுவாரஸ்யமான விஷயங்களாக நடந்து வருகிறது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் தற்போது என்னவென்றால் இத்தனை நாட்களாக சீரியல் படப்பிடிப்பிற்கு வராமல் இருந்த அகிலன் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதையும் காணலாம்.