• Apr 24 2024

பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ராவா இது- ரஞ்சிதமே பாடலுக்கு இப்படி சூப்பராக ஆடுகின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கணவன் இல்லாமல் குடும்பத்தை தனது சொந்த செலவில் பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண் குறித்தே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு வழியாக கோபி ராதிகாவைத் திருமணம் செய்திருந்தாலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றார்.பாக்கியா வீட்டில் இருந்த போது இருந்த சுதந்திரம் எதுவும் இல்லாமல் ராதிகா வீட்டில் அடிமை போல இருந்து வருகின்றார்


இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியா என்னும் கதாப்பாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகின்றார். இவர் இது தவிர பிற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான் எனலாம். இந்த நிலையில் சுசித்ரா வாரிசு படத்தில் இடம் பெறும் ரஞ்சிதமே பாடலுக்கு சூப்பராக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement