• Apr 23 2024

அழகிய வெள்ளை நிறக்குதிரையுடன் ஏஞ்சல் மாதிரி ஜொலிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இனியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நேஹா மேனன்.கேரளாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார்.


2012 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து  பிரியமானவள் என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.


வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள் ஆகிய சீரியல்களில் நடித்தார்.திரைப்படங்களிலும் நேஹா மேனன் நடித்துள்ளார்.சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜாக்சன் துரை படத்தில் நடித்திருந்தார்.


பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் அழகிய வெள்ளை நிற குதிரையுடன் இவர் எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement