• Dec 07 2022

விஜய் சினிமாவைத் தாண்டி இப்படியான ஒருவரா..? உண்மையை போட்டுடைத்த சினேகா... வைரலாகும் வீடியோ..!

Listen News!
Prema / 4 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகன் என்றால் அது நம்ம விஜய் தான். இவர் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப்படம் உடனே ரசிகர்களுக்குப் பிடித்து விடும். அவ்வாறு விஜய் நடிப்பில் உருவாகி ரசிகர்களின்நெஞ்சை விட்டு அகலாத ஒரு படம் தான் 'வசீகரா'. 


இப்படமானது செல்வ பாரதி இயக்கத்தில் விஜய்-சினேகா நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஜய் நிறைய காமெடி செய்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். அதிலும் குறிப்பாக இவருக்கும் வடிவேலுவுக்கும் வரும் காம்பினேஷன் காட்சிகள் யாவுமே அட்டகாசமாக இருக்கும்.


அதுமட்டுமல்லாது ராஜ்குமார் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் பேவரெட் லிஸ்டில் உள்ளது. இப்படத்தின் வாயிலாக முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் புன்னகையரசி சினேகா.


இந்நிலையில் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகின்றது. இதில் நடுவராக இருப்பவர்களில் ஒருவர் சினேகா. இவர் சமீபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் விஜய்யுடன் பணிபுரிவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது "விஜய் மிகவும் அமைதியாக எல்லோருக்கும் மரியாதை கொடுக்க கூடிய ஒரு சிறந்த மனிதர். காமெடி காட்சியில் அசால்டாக நடித்து முடித்ததும் உடனே அமைதியாக அவர் போல் ஆகிவிடுவார். கேமரா முன் ஒரு விஜய் கேமரா பின் அவர் போல் அப்படியே அமைதியாக இருப்பார்" என சந்தோஷமாக அவரைப் பற்றிப் பெருமையாக கூறியுள்ளார்.