• Dec 04 2023

"மிகச்சிறந்த மனிதர்களுடன் மிகச்சிறந்த இரவு"- முன்னணி நடிகைகளை திடீரென சந்தித்த கீர்த்தி சுரேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரபல தென்னிந்திய நடிகை மேனகா மற்றும் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழில்  இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் மாறி மாறி நடித்து வருவதோடு முன்னணி நடிகையாகவும் உயர்ந்துள்ளார்.மேலம் இவர் நடித்த  ‘நடிகையர் திலகம்’  திரைப்படம் இவருக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது.


அத்தோடு தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இவை விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றன. சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராகவும் கீர்த்தி சுரேஷ் உள்ளார்.


இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மிகச்சிறந்த மனிதர்களுடன் மிகச்சிறந்த இரவு" என பதிவிட்டு நடிகைகள் ராதிகா, லிஸி, கல்யாணி பிரியதர்ஷன், அனா பென், பார்வதி திருவொத்து, ரீமா கல்லிங்கல், அதிதி பாலன், ப்ரயகா மார்டின் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'புதிய துவக்கம்' என பதிவிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement