தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.
விஜய் நடிப்பில் கடந்த 13ஆம் திகதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகி உள்ளது.இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
சென்னையை பொறுத்த வரையில் 5 நாள் முடிவில் படம் ரூ. 7 கோடிக்கு வசூலித்துள்ளது, மேலும் தமிழகத்தில் நல்ல வசூல் தான். ஆனால் எந்த இடத்திலும் பீஸ்ட் பட வசூல் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை.
இதனால் பீஸ்ட் வசூல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது. விரைவில் மொத்த வசூல் 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மே 11ம் தேதி பீஸ்ட் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளிவரும் என கூறப்படுகின்றது.
இருப்பினும் இது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படாத தேதி தான்.