மீண்டும் வெளிநாடு செல்லவுள்ள பீஸ்ட் படக்குழுவினர்-இந்த நாட்டில் தான் மீதிப் படப்பிடிப்பாம்

406

தமிழ் சினிமாவில் முக்கிய மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூலில் சாதனை படைத்து வருவதும் தெரிந்ததே. அத்தோடு அந்த வகைளில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் கூட வசூலில் அள்ளிக் குவித்தது.

அந்த வகையில் விஜய் தற்பொழுது தனது 65 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதும் தெரிந்ததே.மேலும் ‘பீஸ்ட்’என்னும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அத்தோடு அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் முக்கியமாகும்.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.