• Mar 29 2023

தனக்கு வேண்டியதை சிரித்துக்கொண்டே வாங்கிவிடுவார்...பாலாஜியின் காமெடி டாக்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

ரன் பேபி ரன் திரைப்படத்தின் ப்ரெஸ் மீட் நிகழ்வில் ஆர்.ஜே.பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு இவ்வாறு பேசி இருந்தார் "கிருஷ்ண குமார் தனக்கு வேண்டிய எல்லாத்தையும் சிரிச்சிட்டே செஞ்சிருவார், ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லி இருந்த மாதிரி தான்" என்று கூறினார்.


இந்த நிகழ்விற்கு சில பேரை வரவேணாம் என்று இவர் கூறி அவர்கள் வரவில்லை. இந்த படத்தில் 33ஆவது மாடியில் இருந்து கீழே குதிக்கிறது போல் ஒரு சீன் எனக்கு இருந்தது. குதிக்க தேவையில்லை, பால்கனியில் ஏறி நிண்டால் சரி என்றார், பிறகு இது நாச்சுரலாக இருக்காது குதிங்க என்று சொல்லி விட்டார்.


இந்த டேக் 10 தரம் எடுத்தாங்க, கீழே வரத்தான் தெரிஞ்சிது இவர் சிரிச்சிட்டு நம்மள செய்ய வைச்சுட்டார் என்று. அதேபோல கார் ஓட்ட சொன்னார் நானும் சரி என்று ஓட்டினேன், ஓடிடு இருக்கும்போது முன்னால ஒரு லாரி வந்திச்சு. சார் லாரி வருதுன்னு சொன்னேன் அதுக்கு அவர் சிரிச்சிட்டே சொன்னாரு அதையும் நான் தானே அனுப்பினேன் என்றார்.


அந்த காலத்து பாக்யராஜ் சாரோட மறு பிறவி தான் கிருஷ்ண குமார், தனக்கு தேவையான விஷயங்களை சிரிச்சிட்டே செய்ய வைச்சிருவார். நான் என்னுடைய டீமை எங்கேயுமே விட்டு கொடுக்க மாட்டேன் ஆனால் நானே பொறாமை படக்கூடிய டீம் இவருடைய டீம் தான்.


இந்த படத்திற்கு பெரிய அளவில் வேலைகளை செய்து பிரமாண்ட திரில்லர் படமாக ஆக்கிய லக்ஸ்மன் சாறிற்கு நன்றி. மேலும் இந்த படக்குழுவில் இருக்கின்ற அனைவருக்கும் ரொம்ப நன்றிகள் என்று கூறியிருந்தார்.

 

Advertisement

Advertisement

Advertisement