• Apr 24 2024

“ தவறான வீடியோக்கள்...யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்” கோபி மற்றும் சுதாகர் மீது எழுந்த புகார்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான காணொளிகளை  தயார் செய்து பரப்பியதாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் மீது  திடீரென புகார் எழுந்துள்ளது. அவர்களின் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வினையும், கட்டுமான தொழிலுக்கு தாங்கள் செல்கிறோம் என்கிற வகையில் சுதாகரும் கோபியும்  காணொளி ஒன்றை  காமெடியாக பதிவிட்டிருந்தனர்.


இந்த காணொளியை சுட்டிக் காட்டிய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன், ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது தவறானது என்று தெரிவித்தார். இதனால், பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் யூடியூப் சேனலை தடை செய்து தமிழக அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இதைப்போல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அந்த காணொளியை  மேற்கோள்காட்டி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர் .

பாரதிய ஜனதா கட்சியும் கோபி, சுதாகர் யூடியூக் சேனலுக்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.எனினும் சமீபத்தில் இந்த காணொளிக்காக கோபி மற்றும் சுதாகர் ஆகியோருக்கு அண்ணா பல்கலையில் நடந்த விழாவில் ஒரு அமைப்பால் போலி டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement