தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் ஷாலினி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளை வென்றிருக்கின்றார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து "பேபி ஷாலினி" என புகழ் பெற்ற இவர், பின்னர் கதாநாயகியாக 1997-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
இவரின் திரைப்படங்களில் ஷாலினி ஏற்று நடிக்கும் கதாபாத்திரமானது மிகவும் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை எளிதாக கவரும் வகையில் அமைந்திருக்கும். குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் விஜய், அஜித், மாதவன், பிரசாந்த் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார்.
மேலும் இவர் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய நடிகரான அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டமை நம் அனைவருக்கும் தெரியும். இவர்களுக்கு தற்போது ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.
அதுமட்டுமல்லாது ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற அண்ணனும் உள்ளனர். இருவரும் திரையுலகில் நடிகர், நடிகையாக பணியாற்றி வருகின்றனர். அத்தோடு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை கொண்டிருந்த இவரின் தந்தை, தனது பிள்ளைகளின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றி கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனது தங்கை, மற்றும் அண்ணனுடன் இணைந்து ஷாலினி எடுத்துக் கொண்ட சமீபத்தியப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தீபாவளி தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும்.
Listen News!