• Apr 20 2024

பேபி டால்.. ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்கள் உன் வாழ்வில் நிறையட்டும்- ஹன்சிகாவுக்கு வாழ்த்து மழை பொழிந்த குஷ்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல்யமான நடிகையாக வலம் வரும் ஹன்சிகா கடந்த டிசம்பர் மாதம் 4ம் திகதி தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவை பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.

திருமணத்தில் ஹன்சிகா ராணியைப் போலவே ஜொலித்தார்.உடல் முழுக்க விலை உயர்ந்த நகைகளையும் அணிந்திருந்தார்.அத்தோடு திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.


இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்குகளைக் குவித்தும் வருகின்றனர்.ஹன்சிகாவை மணக் கோலத்தில் பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண புகைப்படங்களை பார்த்த நடிகை குஷ்பு "வாழ்த்துக்கள்.. பேபி டால்.. ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்கள் உன் வாழ்வில் நிறையட்டும்" என வாழ்த்தி உள்ளார்.


மேலும் ஹன்சிகா சுந்தர். சி இயக்கத்தில் வெளியான தீயாய் வேலை செய்யணும் குமாரு, அரண்மனை படங்களில் நடித்திருப்பதோடு ரசிகர்களால் குட்டி குஷ்பு என அழைக்கப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement