• Dec 05 2023

நடு ரோட்டில் அசிங்கப்படுத்திய கோபி... முகத்தடி கொடுத்த பாக்கியா... பரபரப்பான திருப்பங்களுடன் 'Baakiyalakshmi' Serial ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் எதிர்பார்க்காத திருப்பங்களோட இந்த சீரியல் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. அந்தவகையில் பாக்கிலட்சுமி சீரியலின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கின்றது.


அதில் கோபி பாக்கியாவை ரோட்டில் நேருக்கு நேர் பார்த்து ரொம்ப கோவமாக " நான்  ஆசை ஆசையா வாங்கி கட்டுன வீடு அது என் ஆச கனவு எல்லாத்தையும் நொறுக்கி வீட்ட விட்டு தொறத்திட்டு என் குடும்பத்தையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டயில்ல" என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா "கொஞ்சமாவது மனச்சாட்சியோட பேசுங்க" என்று  சொல்லுறாங்க . 


பதிலுக்கு "ஆசை எவ்வளோ இருக்கோ பேசு ஆடு , கூடிய சீக்கிரம் கஷ்டப்படுவ ,வருத்தப்படுவ " என்று ரொம்ப ஆணவமா சொல்லுறார். கோபி சொல்லுறது எல்லாம் பொறுமையா பாக்கியா கேட்டு  கொண்டு இருக்கிறார். பின்னர் கோபிக்கு பதிலடி கொடுக்குற மாதிரி " நம்பிக்கை துரோகம் பண்ணவங்க ,கூட இருந்தவல ஏமாத்துனவங்க,கேவலமா வீடு புகுந்து லைசன்ஸ திருடினவங்க எல்லாம்  சந்தோசமா இருக்கும் போது நான் ஏன்  சார் கஷ்ட்ட பட போறேன் , நான் சந்தோசமா தான் இருக்க போறன் அத நீக்க பாக்கத்தான் போறீங்க"  என்று ரொம்ப தைரியமா சொல்லிட்டு கோபியை கடந்து போறாங்க பாக்கியா.\


இப்படித்தான் இன்றைக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு இனி என்ன நடக்கபோகுது என்பதை சீரியலை பார்த்து தெரிந்துகொள்ளவோம்.


Advertisement

Advertisement

Advertisement