பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் டிவியில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. இதில் பல சிறுவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசானி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார். இவர் பணம் இல்லாமையினால் தான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இவரின் ஏழ்மையைப் புரிந்து கொண்ட டிவி சேனல் இவருக்கு 2வாரங்கள் அந்நிகழ்ச்சியில் பாட வாய்ப்பளித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த 2வாரங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது போட்டியாளர்களில் ஒருவராக அசானியும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.
மேலும் இந்தப் போட்டியில் அசானி தொடர்ந்து நீடிப்பதற்காக மற்ற குழந்தைகளின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாது இலங்கைப் பாராளுமன்றத்தில் அசானியின் பெயர் ஒலித்தமையும் அங்கு ஒளிபரப்பு செய்கின்றனர். அதுமட்டுமல்லாது இலங்கை பாராளுமன்றத்தில் கூட அசானியைப் பற்றிப் பேசியிருக்கின்றார்கள் என்பதை நடுவர்கள் அனைவரும் வியக்கின்றனர்.
இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அசானிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!