• Mar 29 2024

ஐயையோ நான் அப்பிடி மட்டும் தான் வாரேன்- லியோ படத்தில் இணைந்த கிரிக்கெட் பிரபலம்- அவரே போட்ட பதிவு

stella / 10 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், பிரதீப் முத்துவும் லேட்டஸ்ட் இணைப்பாக இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியானது.

உடனடியாக லியோ படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்பதை அறிந்ததும் விஜய் ரசிகர்கள் அவரிடமே அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர். விஜய் ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்க முடிவெடுத்த பிரதீப் முத்து அய்யோ ஆளவிடுங்கப்பா சாமி நான் வெறும் 10 செகண்ட் தான் லியோ படத்தில் நடிக்கிறேன் என ட்வீட் போட்டுள்ளார். 


மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்த பிரதீப் முத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் வர்னணையாளராக இணைந்து பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான மீசையை முறுக்கு படத்திலேயே கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார் பிரதீப் முத்து.


இந்நிலையில், விஜய்யின் லியோ படத்தில் சின்ன ரோல் கிடைத்துள்ளதும் தனக்கு சந்தோஷம் தான் என பதிவிட்டுள்ளார். முன்னதாக மெர்சல் படத்தில் மெட்ராஸ் சென்ட்ரல், பரிதாபங்கள் யூடியூப் சேனல்களில் நடித்துள்ள கோபி, சுதாகர் ஒரு சின்ன சீனில் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement