ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய பிரபல சீரியல் நடிகை ஆயிஷா.

246

தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தால் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆயிஷா.அதனைத் தொடர்ந்து அந்த சீரியலின் இயக்குனருடன் நடந்து சில கசப்பான சம்பவங்கள் காரணமாக விஜய் டிவியில் இருந்து விலகினார்.

மேலும் இதனைத் தொடர்ந்து ஷீ தமிழில் வாய்ப்புக்கிடைத்ததால் சத்யாஎன்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இதில் இவரின் நடிப்பும், இவர் பேசும் ஸ்டைலான மொழியும் ரசிகர்கள் பிடித்ததால்,ஏராளமான ரசிகர்கள் ஆயிஷாவை கொண்டாடி வருகின்றமையும் தெரிந்ததே.

மேலும் நடிகை ஆயிஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களைக் கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஷார்ட் ஹர் கட், ஓவர் லிப்ஸ்டிக் என ஹாலிவுட் ஹீரோயின் போல் உடை அணிந்து, புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஆயிஷா.இந்தப் புகைப்படத்திற்கு பலரும் தமது லைக்குகளைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: