• Apr 24 2024

அற்புதமான திரைப்படம்- சாணிக்காயிதம் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது வாத்தி என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். அத்தோடு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சாணி காயிதம், இப்படம் நேற்று அமேசான் பிரைம் வெளியாகி இருக்கிறது. வெளியானது முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இதனால் இப்படம் குறித்து நடிகர் தனுஷும் பதிவிட்டுள்ளார். அதில் "அற்புதமான திரைப்படத்தை கொடுத்த சாணி காயிதம் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நல்ல வேலை செய்துள்ளீர்கள். அருண் மாதேஸ்வரன் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement