• Apr 23 2024

முதல் பாகத்தை முந்த முடியாத அவதார் 2!!- இத்தனை ஆயிரம் கோடி வீணாகி விட்டதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தற்போது வரை நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது அவதார் படம். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதியில் வெளியான அவதார் 2 திரைப்படத்திற்கு  இந்திய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இதனால் இப்படமும் அதன் முதல் பாகத்தைப் போல பெரும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதுஇந்தியாவில் தற்போது வரை 358.20 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது அவதார் 2. தற்போது வரை தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருப்பதால், விரைவில் அவென்ஜர்ஸ் எண்டு கேம் பட வசூலான 367 கோடி என்ற மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அப்படியானால் இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் அவதார் 2 தான் இருக்கும், இப்படத்தை மிக மிக அதிக செலவில் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இருப்பதால் தற்போது உலக அளவில் 1.5 பில்லியன் டாலர்கள் வசூலித்தும் இன்னும் லாபத்தை பெறவில்லை.


தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் 4000 கோடிக்கும் மேல் வசூலித்தால் தான் லாபத்தை பெற முடியும் என்கிற நிலையில்  அவதார் 2 இருக்கிறது என்றே சொல்லலாம். இது படக்குழுவுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.


Advertisement

Advertisement

Advertisement