• Apr 24 2024

அவதார் 2 படத்தின் தமிழ் போஸ்டர் ரிலீஸ்- பட வெளியீடு எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 'அவதார். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார்.இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் தமிழ் பதிப்பின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் வெளியான இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement