• Apr 20 2024

தீபாவாளியை கோலாகலமாக கொண்டாடிய அட்லீயும் அவரது மனைவியும்..அதுவும் யாருடன் தெரியுமா..?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அட்லீ ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். அதுமட்டுமல்லாமல் அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதை தொடர்ந்து  "ராஜா ராணி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.


மேலும் இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி படம் இயக்கி மா பெரும் வெற்றி கொடுத்தார். இப் திரைப்படத்திற்காக விஜய் விருதும் வென்றுள்ளார். 


அதனை தொடர்ந்து இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகி மா பெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் அட்லீ விஜய் ரசிகரும் ஆவார். மேலும் விஜய்யை வைத்து தெறி,மெர்சல்,பிகில் என தொடர் வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.


இந்நிலையில் இயக்குனர் அட்லீ கடந்த 2014 ஆம் ஆண்டு துணை நடிகை ப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அட்லீ தனது மனைவி பிரியாவுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி உள்ளார். மேலும் தனது வளர்ப்பு நாய்குட்டியுடன் கொண்டாடியுள்ளார். இப் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement