• Dec 01 2022

ஷிவினிடம் தாறுமாறான கேள்விகளைக் கேட்டு குழப்பிய ஏடிகே- கதறி அழுத ஆயிஷா- கடைசில பிக்பாஸ் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் ரியாலிட்ரி ஷே தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் 28ம் நாள் கமல் சேர் எப்பிஷோட் என்பதால் அங்கு நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது முதலில் போட்டியாளர்களுக்கிடையில் ஒரு டாஸ்க் ஒன்று வைக்கப்படுகின்றது. அதாவது போட்டியாளர்களில் ஒருவர் செலிபிரிட்ரி ஆகவும் ஒருவர் நிருபராகவும் இருக்கவேண்டும். இதில் செலிபிரிட்ரி நிருபர் கேட்கும் கேள்விக்கு தயங்காமல் பதில் கூற வேண்டும். அதக்படி ஏடிகே ஷிவினை சூப்பராக கேள்வி கேட்டு அசத்தியிருந்தார். இதற்கு கமல் சேர் பாராட்டுத் தெரிவித்தார்.


தொடர்ந்து கமல்சேர் போட்டியாளர்களுக்கு சில அட்வைஸ்ட் கொடுத்தார். அதாவது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போது ரொம்ப ஆர்வத்துடன் வந்தார்கள். ஆனால் இப்போது எல்லோரும் அலட்சியமாக இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக டாஸ்குகள் தரும்போது மெதுவாக செய்யிற மாதிரி இருக்கு. இது அகந்தையா என்று தெரியல.

இங்க வந்த எல்லாருமே நான் உட்பட சம்பளம் வாங்கித் தான் வந்திருக்கின்றோம்.அதற்கு ஏற்றது போல நம்ம வேலைகளை செய்யணும்.மைக்கை எடுத்துட்டு போசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது, வேறு மொழிகளில் பேசுவது, பகலில் தூங்குவது, டாஸ்க்குக்கு லேட்டாக வருவது.. இது கவனக்குறைவு அல்ல, அலட்சியம்.இது தமிழ் பிக் பாஸ் என நினைத்து நான் வந்திருக்கிறேன். விஜய் டிவி இடம் சண்டை போட இருக்கிறேன். நடுவில் இது மலையாள பிக் பாஸ் ஆக மாறிட்டு வருதே.. அதனால் நானும் டபுள் சம்பளம் கேட்கலாம் என இருக்கிறேன்."

"எனக்கு மொழிகள் பிடிக்கும், மலையாள படத்தில் நடித்து இருக்கிறேன். ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் பிரபலமானவன் நான் ஆனால் இந்தி திணிப்புக்கு எதிரானவன் நான்" என கமல் கோபமாக பேசி இருக்கிறார்.  ஷெரினா மற்றும் ஆயிஷா இருவரும் மலையாளத்தில் பேசுவது பற்றி தான் கமல் இப்படி கோபமாக பேசி இருக்கிறார். மேலும் நிருபர் டாஸ்க் நடக்கும் போது ஆயிஷா இந்த விளையாட்டில் தான் தோற்று விட்டதாகவும் நான் வீட்டை போகணும் இங்க இருக்க பிடிக்கல என்று தெரிவித்தார்.


அதேபோல கதிர் சேஃவ் ஆகிய பின் ஆயிஷாவா ஷெரினாவா சேஃவ் ஆவார் என்று கெட்ட போது நிறைய பேர் ஆயிாவைத் தான் கூறினார்கள். அதே போல ஆயிஷா சேஃவ் ஆகியதோடு ஷெரினா எலிமினேட் ஆனார். ஆனால் ஆயிஷா எனக்கு இந்த வீட்டில இருக்க பிடிக்கல என்னை எதற்கு வச்சிருக்கிறீங்க என்று கேட்டு அழுதார். அதற்கு ஏனைய போட்டியாளர்கள் போய் சமாதானம் செய்தனர்.

தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறும் போது ஷெரினா யார் கிட்டையும் பேசாமல் தனியாத் தான் வநதேன் தனியாவே போகின்றேன் என ஹவுஸ்மேட்சிடம் பேசாமல் சென்றார்.பின்கு கமல்ஹாசனினால் ஷெரினாவுக்கான குறும்படம் போடப்பட்டது. தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பின்பு கமல்ஹாசன் இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டடுவதால் பிக்பாஸ் ஓர் சர்ப்ரைஸ் கொடுத்தார்.அத்தோடு போட்டியாளர்களும் பாடல் பாடி கவிதை வாசித்து கமல்சேரை வாழ்த்தி இருந்தார்கள். பின்னர் ஹவுஸ்மேட்டிற்கு கமல்சேரின் பிறந்தநாள் கேகக் அனுப்பி வைக்கப்பட்டதால் அனைவரும் வெட்டி உண்டனர் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைந்தது.