• Sep 30 2023

கடைசியாக என்னோடு தான் இருந்தார்... மனமுடைந்து உண்மையை உடைத்த 'எதிர்நீச்சல்' ஞானம்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

எதிர் நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனின் தம்பியாக ஞானம் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும்  நடிகர் கமலேஷ் அவர்கள் மாரிமுத்துவின் இறப்பு குறித்து கண்கலங்கியவாறு இரங்கல் செய்தி ஒன்றினைத் தெரிவித்து இருக்கிறார் . 


அந்தவகையில் ''அண்ணா எங்களுக்கு கண்டிப்பாக ஈடுசெய்யமுடியாத இழப்பு, ரசிகர்களிடம் நல்ல பெயரும் புகழும் அண்ணன் எடுத்திருக்கிறார். சூட்டிங் ஸ்போட்டில் கூட பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை அண்ணன், தம்பி என்றுதான் கூப்பிடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் "கடைசியாக டப்பிங் செய்யும் போது நான்தான் அவர் கூடஇருந்தேன், பாதி டப்பிங் முடித்துவிட்டு  வெளிய வரும் போதே ஒரு மாதிரி இருந்தாரு. வெளிய போயிட்டு காற்றுவாங்கிட்டு வருவாரு என்று பாத்தா அப்டியே வைத்தியசாலைக்கு போய்ட்டாரு. நான் டப்பிங் முடிய வந்து பாத்தா அவரில்லை, பிறகு அவரின் மகளுக்கு தொலைபேசி எடுத்து கதைக்கும் போது, சூர்யா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. 


கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது .எதிர்பார்க்காத ரொம்ப பெரிய  இழப்பு . குணசேகரன் என்ற கதாபாத்திரத்திட்கு ஏற்ற நல்ல ஒரு நடிகர். நடிப்பை தாண்டி எல்லோருடனும் நல்லா பழகக்கூடியவர் . சமீபத்தில் கூட அவரின் பிறந்தநாளில் எல்லோருக்கும் விருந்துவைத்தார். ரொம்பவும் நல்ல பாசமான மனிதர்" எனவும் மிகவும் உருக்கமாக தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement