சூப்பர்ஹிட் சீரியலில் அஸ்வின் – வலையுலாவில் வைரலாகி வரும் ஒற்றைப்புகைப்படம்..!

694

தமிழ்த் தொலைக்காட்சியில் அநேக மக்களைக் கவர்ந்த தொலைக்காட்சியாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பதும் அறிந்ததே.

அந்த வகையில் உலகம் முழுதும் வாழும் அனைத்து ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது குக்வித் கோமாளி நிகழ்ச்சியே ஆகும்.காமெடி கலந்த ரியாலிட்ரி சமையல் ஷோவான இந்நிகழ்ச்சி அனைவராலும் பேசப்பட்டது என்பதும் தெரிந்ததே.அத்தோடு இந்நிகழ்ச்சிக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது.

இதில் கலந்து கொண்ட 9 போட்டியாளர்களின் ஒருவர் தான் நடிகர் அஸ்வின். இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மூன்று படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார்.

அத்தோடு நடிகர் அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நினைக்க தெரிந்த மனமே, இரட்டை வால் குருவி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.

எனினும் இந்நிலையில் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட்டான ஆபிஸ் சீரியல்களிலும் குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளார்.

அதுவும் ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகி பவித்ராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: