• Apr 24 2024

பிக் பாஸ் வீட்டில் விக்ரமன்-ஐ தொடர்ந்து அந்த என்ற வார்த்தையை கூறிய அசிம்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். அத்தோடு ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

மேலும் இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி வருகிறது. மேலும் இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளுடனும் சென்ற வண்ணம் உள்ளது. அதே போல, Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.

முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாடு பற்றி பேசிய விக்ரமன், “தமிழ்நாடு என்பது அண்ணா, சங்கரலிங்கனார் முதலான அறிஞர்களால் போராடிப் பெறப்பட்ட பெயர்.அத்தோடு  சில கூட்டம் தமிழ்நாடை பிரிக்க முயற்சிக்கும்போது தமிழ்நாடு தமிழ்நாடுதான் என உரக்க சொல்ல வேண்டியிருக்கு. அதை பெயரளவில் சாத்தியம் ஆக்கியவர்களுக்கு இந்த பொங்கல் நன்னாளில் நன்றி செலுத்த வேண்டும்” என கூறினார்.

எனினும் இதை கேட்ட டிடி, “இதை தெரிஞ்சு சொல்றீங்களா.. தெரியாம சொல்றீங்களானு தெரியல விக்ரம்” என ஷாக் ஆனவர், “தமிழ்நாடு தமிழ்நாடு தான்,. அது தான் பொருத்தமான பெயர்” என விக்ரமனை ஆதரித்துவிட்டு, பின்னர், தான் சொன்னதற்கான காரணம் வெளியே சென்றால் புரியும் என தெரிவித்தார்.

அத்தோடு தமிழ்நாடு பற்றி விக்ரமன் பேசி இருந்த விஷயம், அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அசிமும் "தமிழ்நாடு" என்ற வார்த்தையை பேசி உள்ளார்.

அசிம், அசல் கோலார் உள்ளிட்ட போட்டியாளர்கள் அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்கின்றனர். அப்போது அசிமிடம் பேசும் அசல், "நம்ம ஊரு பேரு என்ன?" என்ன கேட்டதும் "தமிழ்நாடு" என அசிம் தெரிவிக்கிறார்.  மீண்டும் இதே கேள்வியை அசல் கோலார் கேட்க, தமிழ்நாடு என மீண்டும் அசிம் தெரிவிக்கிறார். அசல் ஏன் இப்படி கேட்டார் என்பது புரியாமல் அசிம் உள்ளிட்டோரும் திரும்ப கேள்வி கேட்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement