• Apr 25 2024

திருநங்கை ஷிவினை மோசமாகக் கிண்டலடித்த அசீம்- கமல் சேர் இந்த முறை இவங்களை சும்மா விடாதீங்க- கடும் கோபத்தில் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றது .மேலும் மூன்றாம் வாரத்தில் தற்பொழுது நீயும் பொம்மை நானும் பொம்மை என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொம்மை டாஸ்கின்போது அசீம் தனலட்சுமியை பிடித்து தள்ளியதுடன், போடி என்று தகாத வார்த்தையினாலும் திட்டினார்.இது தவிர விக்ரமனுடனும் அடிக்கடி மோதலிலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் தான் மேலும் ஒரு தவறு செய்திருக்கிறார்.சக போட்டியாளரான திருநங்கை ஷிவின் கணேசனை கிண்டல் செய்திருக்கிறார் அசீம். ஷிவின் செய்தது போன்றே செய்து காட்டி அவரை கலாய்த்திருக்கிறார். ஒரு தேசிய தொலைக்காட்சியில் திருநங்கையை இப்படித் தான் கிண்டல் செய்வதா என்று பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

அசீமை எச்சரித்தால் மட்டும் போதாது. அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியே ஆக வேண்டும். இதையாவது கமல் ஹாசன் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கமல் ஹாசன் வருவார், தன் பட அனுபவங்கள் பற்றி பேசுவார். அசீமை நிச்சயம் கண்டிக்க மாட்டார். மேலும் அந்த தடவல் மன்னன் அசல் கோலாரையும் கண்டிக்கவே மாட்டார். இது தான் நடக்கும் என்று பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement