• Apr 23 2024

அசீம் ஒன்றும் அவர் கிடையாது ஆம்பள மீராமிதுன்- தாறுமாறாகக் கிழித்துத் தொங்க விடும் பாலாஜி ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தான் மாறுகின்றனரே தவிர ஸ்க்ரிப்ட்டை அதன் இயக்குநர் கொஞ்சம் கூட சேஞ்ச் செய்யாமல் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஓட்டி வருகின்றார் என்பது ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் தெரிந்து விடுகின்றது.

இதனால் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி அப்படியே கடந்த பிக் பாஸ் சீசன் 4 போலவே நகர்வதாக புகார்கள் கிளம்பி உள்ளன. ஆரி அர்ஜுனன் போல விக்ரமனும், பாலா போல அசீமும் ரம்யா பாண்டியன் போல ஷிவினும், ரியோ போல அமுதவாணனும் உள்ளதாக ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று  சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை கார்டு விளையாட்டில் இந்த ஒரு போட்டியாளர் முந்தைய சீசன்களில் இருந்த ஒரு போட்டியாளர் மாதிரி விளையாடுறாரு என்கிற கார்டை ஷிவின் அசீமுக்கு வழங்கினார். யார் மாதிரி என பிக் பாஸ் கேட்டதும் பாலா என சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் மாதிரி விளையாடுறாரு என ஷிவின் சொன்னார்.

அதை கேட்ட அசீம் "பாலாவா" என ரொம்பவே கேவலமாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தது பாலாஜி முருகதாஸ் ரசிகர்களை ரொம்பவே கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலாஜி முருகதாஸ் மாதிரி எல்லாம் பிசிக்கலாகவோ, அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க் பண்ணியோ ஒரு நாள் கூட அசீம் கேம் ஆடவில்லை. அவர் விளையாடுவது எல்லாமே வெறுப்பு அரசியல் கேம் தான் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.


தற்புகழ்ச்சி செய்து கொண்டு தானும் கேம் ஆடாமல் மற்றவர்களையும் கேம் ஆட விடாமல் ஒட்டுமொத்த ஷோவையே ஓட்டுகிறேன் என்கிற பெயரில் டிஆர்பியையே காலி செய்து வருகிறார் அசீம் என இவர் பாலா எல்லாம் கிடையாது, ஆம்பள மீரா மிதுன் என பாலா ஆர்மியினர் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement