• Apr 25 2024

வெளியானது ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம்.. முதல் விமர்சனம் இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

கொம்பன், மருது, விருமன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் முத்தையா. எனினும் குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் தற்போது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி நடித்துள்ளார். காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். அத்தோடு இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


கிராமத்து கதையம்சம் கொண்ட படமான இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில் இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து இப்படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகி இருக்கின்றது. அதில் நிறைய கேரக்டர்கள். ஆர்யாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் & பிரபு நடிப்பு நன்றாக இருக்கின்றது. இதில் 8 இழுபறி சண்டைகள் உண்டு. அத்தோடு 2 பாடல்கள் ஓகேவாக உள்ளதாகவும், விஷுவல்ஸ் நன்றாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement