• Dec 01 2023

தங்களின் செல்ல மகளுடன் வெளிநாட்டில் Outing சென்ற ஆர்யா – சயீஷா!வைரலாகும் கியூட் போட்டோஸ்

Jo / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் ,நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா – இவ்வாறு சொல்லிகொண்டே போகலாம். 

அந்த வரிசையில்  ஆர்யா – சயீஷா ஜோடியும் உள்ளார்கள் . கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி  ஆர்யா  நடிகை சயிஷாவை திருமணம் செய்துகொண்டார் . இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் பிறகு டெடி என்ற படத்தில் கனவன், மனைவி இருவருமே ஜோடியாக நடித்தனர்.அவர்களுக்கு 2021ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்



தங்கள் மகளுக்கு ஆரியானா என்று பெயரிட்டினர் . ஆனால், இதுவரை தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடாமல் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ  வெளியிட்டு இருந்தார். அதில் கூட மகளின் முகத்தை காட்டாமல் தான் இருந்தார். 



இந்த நிலையில் ஆர்யா – சயீஷா இருவரும் தங்கள் மகளுடன் Outing சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.இது தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement