’என்னையும் கைது செய்யுங்கள்’ நடிகை ஓவியா ட்வீட்டால் ஏற்பட்ட பரபரப்பு-இது தான் காரணமாம்.

252

பிக்பொஸ் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ஓவியா.

இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை யாரும் கொண்டாடவில்லை என்பதே உண்மை.

பிக்பொஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் நிறைய பட வாய்ப்பும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிட்டியது.

மேலும் டெல்லியில் பிரதமர் மோடிக்கெதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து, #ArrestMetoo என்ற ஹேஷ் டேக்கில் நடிகை ஓவியா எதிர்ப்பு குரலை எழுப்பியிருக்கிறார்.

மேலும் நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில், டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

எனினும் இது தொடர்பாக நகரின் பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து #ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார்.


எனினும் இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோட்டிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற ஹேஷ் டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: