ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாக நடந்து கொண்ட அர்ஜுன்; சர்ச்சையை கிளப்பிய விடயம்-நடந்தது என்ன?

11004

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் அர்ஜுன்.அந்த காலம் தொடக்கம் இன்றைய காலம் வரை தனக்குரிய ஹிட் படங்களை மக்களுக்கு வழங்கி கொண்டே இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.பல மொழிகளில் நடித்து இருந்தாலும் தேசப்பற்று உள்ள கதையையே இவர் தேர்ந்தெடுப்பவர் கூட.

அத்தோடு கடந்த 12 ஆம் திகதி ஜீ தமிழில் ஆரம்பமான “சர்வைர் ” என்ற மிகப்பெரிய ஷோவை தொகுத்து வழங்குகிறார் நமது ஆக்ஸன் கிங்.அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பும் உண்டு.

இவ்வாறு இருக்க சமூகவலைத்தளங்களில் ஒரு விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்து.அது என்னவென்றால் அர்ஜுன் மீது “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், விஸ்மயா (தமிழில் ‘நிபுணன்’) படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்தபோது, நானும் அவரும் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. அந்தக் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக, படப்பிடிப்புத் தளத்தில் அனைவரது முன்னிலையிலும், அர்ஜுன் எனது அனுமதி இன்றி என்னிடம் நெருக்கமாக வந்து என்னைத் தொட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது என்று பதிவிட்டு இருந்தார். எனினும் இதை தொடர்ந்து நடிகர் அர்ஜுனும், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது பொலிசில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அத்தோடு நடிகர் அர்ஜுனின் சார்பாக அவரது உறவினரும் கன்னட நடிகருமான மறைந்த நடிகர் துருவா சார்ஜா பெங்களூர் சிவில் நிதிமன்றத்தில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடந்தார் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி படக்குழுவினருக்கு பல முறை பொலிசார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஆஜராகாத நிலையில், மீண்டும் நிபுணன் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குனர் அருண், அரவிந்த் உள்ளிட்டோரை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.