• Sep 21 2023

சரஸ்வதி போட்ட புது பிளானிலும் மண் அள்ளிப்போட்ட அர்ஜுன்- குழப்பத்தில் இருக்கும் நமச்சி- Thamizhum Saraswathiyum Promo

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் கோதைக்கு அர்ஜுன் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. இதனால் கோதை எப்படி அர்ஜுன் பற்றிய உண்மைகளைக் கண்டு பிடிக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதாவது சரஸ்வதி அர்ஜுனின் உண்மை முகத்தை எப்பிடியாவது எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக பல வழிகளில் போராடி வருகின்றார். அந்த வகையில் அர்ஜுன் பற்றிய வீடியோ ஒன்றை பெற சேகர் என்பவரை அனுகிருந்தார்.


அந்த நபரும் வீடியோவைக் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறி விட்டு பின்னர் வீடியோ அழிஞ்சிடுச்சு என்று கூறி விடுகின்றார். அத்தோடு இதனை அர்ஜுனிடம் சொல்லி விட்டு பணத்தையும் வாங்கிக் கொண்டு போகின்றார். சரஸ்வதியை மீண்டும் தோற்கடிக்க வைத்ததை நினைத்து அர்ஜுன் ரொம்ப சந்தோஷப்படுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement