தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத்திறன் கொண்டு விளங்குபவர் நடிகர் மனோபாலா.
இவர் பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இதை தொடர்ந்து தற்போது பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66வது படத்தில் நடித்து வருகின்றார்.
எக்கச்சக்க படங்களில் காமெடியில் ரசிகர்களை காமெடியில் கவர்ந்த அவர் தற்போது சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
அத்தோடு அவரது ட்விட்டர் கணக்கில் அவ்வப்போது பிரபலங்கள் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் மனோபாலா வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறுஇருக்கையில் மனோபாலா ட்விட்டரில் "Lunch with suhasini and manirathnam" என குறிப்பிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் மோகன், அம்பிகா மற்றும் லிஸ்ஸி ஆகியோர் உடன் மனோபாலா இருக்கிறார்.
அந்த போட்டோவில் மணிரத்தம், சுஹாசினி எங்கே, குடிச்சிட்டு ட்விட் போடுறீங்களா என நெட்டிசன்கள் தற்போது மனோபாலாவை கலாய்த்து வருகின்றனர்.
அண்ணே என்ன சரக்கு சாப்டிங்க 😁
இவரு என்ன சரக்கு வாங்குறார்ன்னு முதல்ல கண்டுபிடிக்கணும்
Listen News!