• Apr 25 2024

நீங்கள் தமிழரா? கண்டுபிடிக்க புது ரூட்டை பயன்படுத்திய எதிர்நீச்சல் மாரிமுத்து ..கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குநர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற எதிர்மறை வேடத்தில் நடித்துவரும் மாரிமுத்து தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகின்றார். எனினும் சமீபத்தில் ட்விட்டரில் மாடர்ன் உடை அந்த பெண்ணின் புகைப்படத்துன் 'Can I Call You' என ஒருவர் பதிவிட்டிருந்தார். அது பெண் என நம்பி நடிகர் மாரிமுத்து என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து யெஸ் என செல்போன் எண் பதிவிடப்பட்டிருந்தது. அந்த எண்ணை ட்ரூ காலர் ஆப் மூலம் மாரிமுத்துவின் நம்பர் தான் என நெட்டிஷன்கள் உறுதி செய்தனர்.


இதனையடுத்து மாரிமுத்துவின் மகன், ''இது எனது அப்பாவின் ட்விட்டர் கணக்கு இல்லை, போலியானது என விளக்கமளிக்க, மாரிமுத்துவோ ''ஒரு பொண்ணு நம்பர் கேட்டா கொடுக்கிறதுல என்ன தப்பு? நான் பயந்தவன் கிடையாது'' என்று பேட்டியொன்றில் பேசியிருந்து  சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மாரிமுத்துவின் மற்றொரு வீடியோ டிரெண்டாகிவருகிறது. பேட்டியொன்றில்  மாரிமுத்து கூறியதாவது, ''தமிழ் மணப்பெண் சேலைகட்டிக்கிட்டு ஆடிக்கிட்டே வந்து மணவறையில் தாலி வாங்கக் கூடாது என்பது என் கருத்து. டான்ஸ் முதல் நாளும், கல்யாணத்துக்கு அடுத்த நாளும் ஆடட்டும். கல்யாணத்தன்று பெண் தலை குணிந்து நடந்தால் தான் அழகாக இருக்கும். தலை குணிந்து நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு. பெண் நிமிர்ந்து நடந்துவந்தால் அசிங்கமாக இருக்காது? என்று கூறினார்.


அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளர் பெண் டான்ஸ் ஆடுவதும் அழகு தானே சார் எனக் கேட்க, அதெல்லாம் இல்லை, நீங்கள் தமிழரா?, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி பேசுவார்கள் என மாரிமுத்து அதிரடியாக பேசினார். அத்தோடு ஆணுக்கு அரையடி பின்னே பெண் நடந்துவருவதுதான் அழகு. இது பிற்போக்கு அல்ல. முற்போக்கு என பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவி இருந்தது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், மிக கேவலமான மனநிலை பிற்போக்கின் உச்சம் என விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement