• Apr 20 2024

''குடிச்சுட்டு வருவியா? ஓவரா பேசினா மூஞ்சிலேயே குத்துவன்''.. ‘குடிமகான்’ படக்குழுவினர் கலக்கல் பேட்டி!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்து நடித்துள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் 6வது சீசனில்  ரன்னர் அப் டைட்டில் வென்றவர் இயக்குநர் பிரகாஷ்.என். இவர் இயக்கும் குடிமகான் திரைப்படத்தில் அறிமுக நாயகனாக இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சிவன் நடித்துள்ளார்.

இதில் நடிகை சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது உட்பட பலர் நடித்துள்ளனர். தனுஜ் மேனன் இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் குறித்து இப்படக்குழுவினர் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் முதலில் ஜாலியாக ஒரு ப்ளேவை நடித்தனர். அதன்படி குடிக்காமல் திடீரென போதையாகும் நம்பமுடியாத வியாதி இருப்பதாக சொல்லி விஜய் சிவன் சொல்வதுடன் சாந்தினியிடம் ஓவராக பேசுகிறார். போதையில் பிதற்றுவதால் தன்னை அனைவரும் ஒரு கேலிப்பொருளாக பார்ப்பதாக சொல்லி வருத்தப்படும் விஜய் சிவன்.

பின்னர் இந்த நடிப்பில் இருந்து சகஜ நிலைக்கு வந்து சிரித்தபடி ஜாலியாக பேசிய படக்குழுவினர் படம் பற்றிய தகவல்களை தங்கள் அனுபவங்களையும் குறிப்பிட்டனர். அப்படி சாந்தினி தமிழரசன் பேசும்போது, “நான் பொதுவாக பார்ட்டிகளுக்கு போவதில்லை. 

ஆனால் நண்பருடன் நியூ இயர் பார்ட்டிக்கு சென்றபோது அவர் மிகவும் குடித்துவிட்டு வாந்தி எடுத்து அட்ராசிட்டி பண்ணினார். அவரை கட்டுப்படுத்தவே முடியல.” என ஜாலியாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர்கள், “குடியை பற்றிய திரைப்படம் என்றாலும் குடியை புரமோட் பண்ணும் படமாக இது இருக்காது.  நாட்டில் உள்ள ஒரு சிட்டிசன் (குடிமகன்) ஒரு ‘குடிமகானாக’ இருந்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் சுவாரஸ்யமாக உருவானதுதான் இத்திரைப்படம்” என்கின்றனர். 

அதே சமயம் இப்படத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் நாயகனை ஒரு மனைவி எப்படியெல்லாம் கோபப்பட்டு திட்டுவாரா அப்படியெல்லாம் விஜய் சிவனை திட்டியதாக சாந்தினி கூறினார். 

பின்னர் இப்படத்தின் இயக்குநர் பேசும்போது, “டீ டோட்டலாராக இருக்கும் ஒருவர் குடிக்காமலேயே போதையாகும் வியாதியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. உண்மையில் சிலருக்கு இப்படி நோய் இருக்கிறது” என்றார்.


Advertisement

Advertisement

Advertisement