• Apr 01 2023

டிஜே பிளாக்கும் பூஜாவும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா?- பிராங் பண்ணியதால் ஏற்பட்ட நிகழ்வு- மன்னிப்புக் கேட்ட பூஜா

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகின்றது. பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயால், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் இந்த போட்டியில் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

 விஜய் டிவியின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றிகரமாக செல்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் டிஜே பிளாக். இவர் ரியாலிட்டி ஷோக்களின் போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பிண்ணனியில் வடிவேலு மற்றும் கவுண்டமணி போன்றவர்களின் குரல்களை ஒலிக்க விட்டு அவர்களை கலாய்ப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். 


 சூப்பர் சிந்த நிகழ்ச்சியிலும் டிஜே பிளாக் போட்டியாளராக இருக்கும் பூஜா வரும்போது அவருக்கு ஏற்றார் போல பின்னணியில் பிக்கப் லைன்களை போடுவார். இது பார்ப்பதற்கே மிக க்யூட்டாக இருந்தது. பலரும் அதை கட் செய்து youtubeல் வீடியோக்களாக போட்டு வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பூஜாவின் வீட்டில் இருந்து அவரது பெற்றோர்கள் வந்திருந்தனர்.

இப்போது பூஜாவின் பெரியம்மா யூடியூப் ஐ தொறந்தாலே சூப்பர் சிங்கர் பூஜா என்று போட்டாலே டிஜே பிளாக் பூஜா என்று தான் வருகிறது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கிறது, ஒரு பெண் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் டிஜே பிளாக்கிடம் கடுமையாக பேசினார். இதனால் டிஜே பிளாக் மற்றும் நடுவர்கள் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.


 ஆனால் இறுதியில் அது பிராங்க் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் டிஜே பிளாக் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பூஜா நாங்கள் டிஜே பிளாக்கை பிராங்க் செய்திருந்தோம். அந்த பிராங்க் உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் அதை என்ஜாய் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் யாருக்காவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பகிர்ந்திருக்கிறார். சிலர் டிஜே பிளாக்கும் பூஜாவும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா? என்று கமெண்டில் கேள்வியும் எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement