• Apr 20 2024

ஹீரோயின்களை டப் கொடுக்கும் அர்ச்சனாவின் மகள் சாரா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா .அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனக்னெ ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது. 


இதன்பின் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் வலம் வந்த அர்ச்சனா, மீண்டும் ஜீ தமிழுக்கே சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சியை தனது மகள் சாராவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.


இவ்வாறுஇருக்கையில் சிறு வயதிலேயே தொகுப்பாளினியாக அடியெடுத்து வைத்துள்ள சாரா சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


சாரா சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். இவ்வாறுஇருக்கையில் , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு சில புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.


இவர் வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement

Advertisement