25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் அரவிந்த்சாமி!

173

ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் நடிகர் அரவிந்த் சாமி.

இவர், அண்மையில் வெளியான ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவி’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தார் . தலைவி படம் தற்போது வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் தமிழிலும் மலையாளத்திலும் இயக்குனர் பெல்லினி “ஓட்டு” என்ற படமொன்றை இயக்கி வருகிறார். படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் குஞ்சாகோபோபனுடன் சேர்ந்து அரவிந்த்சாமியும் நடிக்கின்றார்.

இதற்கு முன்பு அரவிந்த் சாமி.25 வருடங்களுக்கு முன்னர் மலையாளத்தில் பரதன் இயக்கிய “தேவராகம்” படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு, நடிகர் அரவிந்த் சாமி இந்த படத்தில் தான் மீண்டும் மலையாளத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.