தனது மகனை ஹாஸ்டலில் சேர்த்த அறந்தாங்கி நிஷா- என்ன காரணம் தெரியுமா?

1390

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில் 9 சீசன்கள் சூப்பராக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் கலக்கப் போவது யாரு.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இதனைத் தொடர்ந்து ராமர் வீடு, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் மற்றும் சில நிகழ்ச்சிகளிலும் கூட பங்கேற்று வந்தார். பின்பு மாரி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.

கொரோனா லாக்டவுண் காலத்தில் வீட்டுக்குள் இருந்த நிஷா கருப்பு ரோஜா என்னும் யூடியுப் சேனலை ஆரம்பித்து அதில் தனது அன்றாட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ யூடியுபில் டிரெண்டாகி வருகிறது. அதாவது இவருக்கு அஷ்ரத் என்ற மகனும், சஃப்ரா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நிஷா தனது மகன் அஷ்ரத்தை ஹாஸ்டலில் சேர்த்துள்ளார். அதுகுறித்து யூடியுபில் நிஷா பேசியது; அஷ்ரத் மிகவும் சமத்தான குழந்தை. அவன்தான் என்னுடைய கனவு. அறந்தாங்கியில் அம்மாவிடம் தான் அவர் வளர்ந்தான். 1 முதல் 5 வரை அங்குதான் படித்தான். விளையாட்டில் அவனுக்கு மிகவும் ஆர்வம் உள்ளது. எனக்கும் படிப்பெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அவன் நிறைய விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவன் மிகவும் அமைதியானவன். யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டான். அதனால் ஹாஸ்டலில் இருந்தால் புதிய நண்பர்களிடம் பழகுவான். அவனுடைய மனது மாறும். மேலும் அவன் கூடைப்பந்து, நீச்சல் என நிறைய விளையாட்டில் ஈடுபடுவான். இன்று அவனை பார்கக்கூடிய நாள். அவனை மதியம் சாப்பிட வெளியே அழைத்து செல்லப் போகிறேன் என்று கூறி மகனை சந்தித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் தனது கணவர் மற்றும் மகளுடன் மகன் அஷ்ரத்தை சந்திக்க நிஷா பள்ளிக்கு போகிறார். நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஷ்ரத் தனது அம்மா மற்றும் தங்கையை பார்த்ததும் ஓடோடி வருகிறான். பின்னர் மகனை அழைத்துக் கொண்டு, மதிய உணவு சாப்பிட தன்னுடைய நிஷா தோழி வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மகனை சாப்பிட வைத்த பிறகு, அணைத்து தூங்குகிறார். பின்னர் தனது மகனை மீண்டும் ஹாஸ்டலில் கொண்டு விடுவதுடன் வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ தற்போது யூடியுபில் டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது