‘காளை மாடுயா’ கணவரைக் கிண்டலடித்த அறந்தாங்கி நிஷா-வைரலாகும் வீடியோ

86

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்துள்ளன. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக 9சீசன்களாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான்கலக்க போவது யாரு நிகழ்ச்சி .

இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் அறந்தாங்கி நிஷா. மேலும் இவர் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சில படங்களிலும் பிக்பாஸிலும் கலந்து கொண்டு பிரபல்யமானவர். அதனைத் தொடர்ந்து பிபி ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது நடன திறமையை மக்களுக்கு நிரூபித்துள்ளார்.

மேலும் காமெடி, டான்ஸ் , சமையல் என ஆல்ரவுண்டராக கலக்கும் அறந்தாங்கி நிஷா தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இன்று மாட்டுப்பொங்கலை அவர் கணவருடன் கொண்டாடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.நான் செய்த பொங்கலை நீயாவது சாப்பிட வந்தாயே மஹாலக்ஷ்மி என கணவர் சொல்ல, ‘இது காளை மாடுயா’ என கிண்டல் செய்து கலாய்த்து இருக்கிறார். இதோ அந்த வீடியோ

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: