சென்னையில் புதிய வீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா- பாராட்டைக் குவித்து வரும் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சியில் இருந்தே சிவகார்த்திகேயன் ரோபோ ஷங்கர் புகழ் அஸ்வின் ப்ரியா பவானி ஷங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்ரான்ட் டப் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருப்பதோடு கலகலப்பு 2 கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

அவரது கணவர் ரியாஸ் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணம் இப்போது அவர் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார். விஜய்யில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கு பெற்றிருக்கிறார். வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்.

தற்போது நிஷாவும் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

சூட்டிங் முடிந்து சொந்த ஊருக்கு சென்று மறுபடியும் சென்னை வருவது கஷ்டம் என்பதால் நிஷா சென்னையிலேயே புதிய வீடு வாங்கியுள்ளார். அதனை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் இதனால் ரசிகர்கள் தமது பாராட்டுக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்