• Apr 25 2024

இந்தத் தலைமுறையினரை நினைத்து வருந்திய ஏ.ஆர். ரஹ்மான் - ஏன் தெரியுமா?

Jo / 11 months ago

Advertisement

Listen News!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தை தெரிந்தவர்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில்கூட மேடையில் பேச ஆரம்பித்த தனது மனைவி சாயிரா பானுவிடம், "ஹிந்தில பேசாதீங்க தமிழில் பேசுங்க ப்ளீஸ்" என வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் பயங்கர ட்ரெண்டானது. அதனையடுத்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல என்ன பேசுவாங்க" என கேள்வி எழுப்பியிருந்தார்.இசைப்புயலின் தரமான பதிலடி: கஸ்தூரியின் இந்த ட்வீட் விவாதத்தை கிளப்ப, அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான், 'காதலுக்கு மரியாதை' என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டார். இதனை பார்த்த ரஹ்மானின் ரசிகர்கள். ஒரே வார்த்தையில் கஸ்தூரியை இசைப்புயல் வாரி எறிந்துவிட்டார் என அந்த ட்வீட்டை ட்ரெண்டாக்கினர்.

 இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், சீனாவில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்த ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸை (Artificial Intelligence) ஒன்றை பயன்படுத்துகிறார்கள். அதாவது மாணவர்களுக்கு தலையில் ஹெட்போன் போன்ற கருவி ஒன்று மாட்டப்படுகிறது.

இந்தக் கருவி மாணவர்களின் தலையில் மாட்டிவிட்டால் ஆசிரியர் நடத்தும் பாடங்களை அவர்கள் கவனிக்கிறார்களா ? அல்லது வேறு சிந்தனையில் இருக்கிறார்களா? என்பதை கண்டுபிடித்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தகவல் அனுப்பும் என கூறப்படுகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்து, "இந்த கால தலைமுறையை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இவர்கள் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். காலம்தான் பதில் சொல்லும்" என குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் கேரளா ஸ்டோரி திரைப்படம் சர்ச்சையை சந்தித்த சூழலில், கேரளாவில் இந்து ஜோடி ஒன்று மசூதியில் திருமணம் செய்துகொண்ட வீடியோவையும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement