• Apr 25 2024

ஏ.ஆர். ரஹ்மான் முன்னால் நிற்க, பின்னால் நின்று ரசிக்கும் த்ரிஷா- இணையத்தை அதிரவைத்த ஒற்றை ஃபோட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

செப்டம்பர் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின்  போஸ்டர்கள், டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழுவினர் இயங்கி வருகின்றனர். சமீபத்தில், இயக்குநர் மணிரத்னம், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இதற்கு அடுத்தபடியாக, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னால் ஏ.ஆர். ரஹ்மான் நிற்க, பின்னால் நின்ற படி அவரை பார்த்து சிரித்தபடி ரசித்து கொண்டே நிற்கிறார் நடிகை த்ரிஷா. மேலும், அவரது கேப்ஷனும் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement