• Nov 29 2022

ஏ.ஆர்.ரகுமானின் பேவரைட் போட்டியாளர் இவர் தானாம்-அவரே பகிர்ந்த வீடியோ..!

Listen News!
Aishu / 1 week ago
image
Listen News!

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனில் கலந்து கொண்டிருப்பவர் பாடகரான அப்து ரோசிக். வளர்ச்சி இல்லாத ரோசிக்கால் பிக் பாஸ் வீடு களைகட்டுகிறது.

பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராக இருக்கிறார் அப்து ரோசிக். சுந்தர் சி. பாஷையில் சொல்ல வேண்டுமானால் ரோசிக்கை பார்க்கும்போது சுச்சுக்கி பிச்சுக்கினு கொஞ்ச வேண்டும் போன்று இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும் அப்து ரோசிக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பலரும் ஃபாலோ செய்கிறார்கள்.பிக் பாஸ் 16 வீட்டில் தங்க வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருக்கிறார் அப்து ரோசிக். அத்தோடு அவர் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று நம்பப்படுகிறது.


இந்நிலையில்  ஏ.ஆர்.ரகுமான் பாடிய முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா எனும் பாடலை அப்து ரோசிக். சுந்தர் சி பாடியுள்ளார்.,இந்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்ரோரியில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் இந்த சீசனில் ஏ.ஆர்.ரகுமானுக்கு இவர் தான் பேவரைட் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.