• Apr 25 2024

ப்ப்பா...ஜெயம் ரவியின் 'அகிலன்’ படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி “அகிலன்” எனும் திரைப்படத்தினை  நடித்து முடித்துள்ளார். 

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அகிலன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை தமிழகத்தில் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிடுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படம் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது ஜெயம் ரவியின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றேசொல்லலாம். இப்படம் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement